அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?
தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்றதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என அவளாகத்துறை சமீபத்தில் தெரிவித்த நிலையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்றுள்ளார்.
நேற்று மாலை அவர் விமானம் மூலம் டெல்லி சென்றதாகவும், இரவு முழுவதும் டெல்லியில் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் இன்று காலை சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரின் டெல்லி பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கக் கோரியும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், திடீரென செந்தில் பாலாஜி டெல்லி பயணம் செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva