1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (11:01 IST)

அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழகம் புறக்கணிப்பு

education
அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் உரிமைகள் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத்தில் நடைபெறுகிறது 
 
இன்று நடைபெறும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக கல்வித்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு வந்த போதும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன