செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (10:25 IST)

லண்டன் சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவது எப்போது? பாஜக வட்டார தகவல்..!

Annamalai
"லண்டனுக்கு அரசியல் குறித்த மேல்படிப்பு படிக்கச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை திரும்புவது எப்போது என்பது குறித்த தகவல் பாஜக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 மாத அரசியல் படிப்பு படிக்க கட்சி தலைமை அனுமதியுடன், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றார். 
 
இந்த நிலையில், அண்ணாமலை நவம்பர் 23ஆம் தேதி சென்னை திரும்ப இருப்பதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் அரசியல் படிப்புக்காக சான்றிதழ் பெற லண்டன் செல்வார் என்றும் கூறப்படுகிறது. 
 
அண்ணாமலை சென்னை திரும்பியதும், தமிழக பாஜகவில் சில மாவட்ட நிர்வாகிகளை மாற்றி அமைக்க இருப்பதாகவும், இளைஞர்களுக்கு நிர்வாகத்தில் அதிக வாய்ப்புகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த ஐடியாவுக்கு கட்சி தலைமை பச்சைக் கொடி காட்டியதாகவும், எனவே, வயதான நிர்வாகிகளுக்கு ஓய்வு அளித்து, அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, கட்சி நிர்வாகம் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது."
 
 
Mahendran