1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:30 IST)

பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை: மத்திய அரசை அடுத்து தமிழக அரசும் அரசாணை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த தடை காரணமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மட்டுமின்றி அதன் கிளை அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசும் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளது என்பதும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பிற்கு தமிழகத்தில் தடை என சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் அதனை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது