வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மீண்டும் கட்டாயமாகும் இ பாஸ்- தமிழக அரசு அறிவிப்பு!

பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தமிழகத்துக்குள் நுழைய இ பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைபவர்கள் இ பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேநேரம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ பாஸ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.