தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர்களுக்கு கொரோனா உறுதி!
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே இன்று மதியம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் தொண்ணூற்று ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை என்ற நிலையில் திடீரென சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி விடுதி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது