செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (19:32 IST)

ஒரே நாளில் பயன்பாட்டுக்கு வந்தது தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை

ஒரே நாளில் பயன்பாட்டுக்கு வந்தது தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல சுரங்கப் பாதைகள் தண்ணீரில் மூழ்கின என்பதும் இதனால் போக்குவரத்து தடை பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக திநகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை தண்ணீரால் நேற்று மூழ்கடிக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக களத்தில் இறங்கி தண்ணீரை வெளியேற்றி உள்ளனர் என்பதும் தற்போது அந்த சுரங்கப்பாதை முழுமையாக தூய்மை செய்யப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நேற்று தண்ணீரில் மூழ்கி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சீர்செய்யப்பட்டு போக்குவரத்தை அனுமதிக்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்