வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 25 ஜூலை 2016 (11:06 IST)

ஒருவன் பிடிக்க; மற்றொருவன் வெட்ட சுவாதியை கொன்றது இரண்டு பேர்: வக்கீல் திடுக்கிடும் தகவல்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்த வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவல்கள் வெளிவருகின்றன. ராம்குமாருக்காக வாதாட வழக்கறிஞர் குழு ஒன்று உள்ளது. இவர்கள் தினமும் புதுப்புது தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
ராம்குமாருக்கு ஆதரவாக உள்ள ஒரு வழக்கறிஞர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாதியை இரண்டு பேர் சேர்ந்து கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
 
சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அவரது கொலை மர்ம நிறைந்ததாகவே உள்ளது. இந்த மர்மத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது இந்த வழக்கறிஞரின் பேட்டி.
 
அவரது பேட்டியில், தனக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருந்து ஒருவர் போன் செய்ததாகவும் அவர் சுவாதி கொலையை நேரில் பார்த்ததாகவும் கூறினார்.
 
இது குறித்து விவரித்த அந்த நபர், சுவாதி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது வந்த ஒருவர் சுவாதியின் தலைமுடியை பிடித்து அவரை நிமிர்த்து பிடித்ததாகவும், மற்றொருவர் சுவாதியை வெட்டியதாகவும் கூறினார்.

 


நன்றி: Red Pix
 
குழந்தைகள், குடும்பம் இருப்பதால் தனக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசில் கூறவில்லை என அந்த நபர் கூறியதாக வழக்கறிஞர் கூறினார். எனவே இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் இருப்பதால் இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.