மொத்தத்தையும் அண்ணாமலை கெடுத்துட்டாரு: எஸ்.வி.சேகர் விமர்சனம்
பாஜக கூட்டணியின் வெற்றியை அண்ணாமலை கெடுத்து விட்டார் என்றும் அதற்கு அவருக்கு சரியான தண்டனை கிடைத்தால் தான் அவர் திருந்த வாய்ப்பு இருக்கிறது என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு பாஜகவை பூஜியத்துக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என்றும், அதில் பதிமூன்று இடங்களில் டெபாசிட் போய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜகவை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன், மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று அவர் கூறியது பொருத்த மற்றது என்றும் ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தோல்விதான் என்றும் அவர் கூறினார்
திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் வைத்திருந்தார்கள் என்றும் ஆனால் அண்ணாமலையின் அடாவடி பேச்சு காரணமாக கூட்டணி சிதைந்து விட்டது என்றும் பாஜக கூட்டணி தோல்விக்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்றும் எஸ்வி சேகர் கூறியுள்ளார்.
Edited by Siva