திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (15:08 IST)

தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

kkssr
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது,.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக  நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர்  ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ளது.

 இரண்டு அமைச்சர்களும் ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய தாமாக முன்வந்து எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை எதிர்த்து இரு அமைச்சர்களும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது,.

Edited by Siva