1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (12:32 IST)

செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு பணம் கிடைத்து விட்டதால் சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவித்தனார். இதனையடுத்து இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. 
 
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. 
 
இந்த தீர்ப்பில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த வேண்டும் என்றும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva