மறுக்கும் உச்சநீதிமன்றம்; கொதிக்கும் மாணவர்கள்!!
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டை தடை செய்து பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வந்தன. இருப்பினும் இடைக்கால உத்தரவுப்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால் இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுகோரியும் பீட்டா அமைப்பை எதிர்த்தும் தமிழகத்தில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் ராஜா ராமன் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டக் குழு மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் போராடுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு நிராகரித்துவிட்டது.