திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (19:22 IST)

கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

rajinikanth-mk stalin
கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி  பங்கேற்றுள்ளார்
 
சென்னை மெரினா கடற்கரரை சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணா நிதியின் புதிய நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுக்கப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் புதிய நினைவிடங்களை  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
இந்த இரண்டு  நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த  நினைவிடங்களின் வாயிலில், பேரறிஞர் அண்ணா நினைவிடம் முத்தமிழறிஞர்  கலைஞர் நினைவிடம் என்று பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
 
கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும், அமைச்சர் துரைமுருகன், ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.