1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 19 மார்ச் 2017 (14:07 IST)

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

நான் ஒரு டைப்பான ஆளு: எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட எம்எல்ஏ! (வீடியோ இணைப்பு)

கோவை சூலூர் தாலுகாவில் பெரியகுயிலியில் நடந்த கல் குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்த அதிமுக சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் தான் ஒரு டைப் ஆனா ஆள் எனவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எடப்பாடி அணியில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் சவால் விட்டுள்ளார்.


 
 
சூலூர் தொகுதி எம் எல் ஏ கனகராஜ் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளவர். அவர் வெடி விபத்து ஏற்பட்ட அந்த கல் குவாரியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது ஒரு விபத்தே இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றார்.
 
ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலீசார், இதை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுக்க உள்ளதாகவும், குறிப்பிட்ட கல் குவாரியில் விபத்து நடக்க காரணமானவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
 
நான் ஒரு டைப்பான ஆளு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்று விடுவேன், ராஜினாமா செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி (சசிகலா) அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.