Daily Horoscope
✕

சுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா

Written By Suresh
Updated: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (13:56 IST)
சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக டுவிட்டரில் அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்டன.
 
இந்த மூன்று வழக்குகளிலும் அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து இதுவரை சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக 5 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

Show comments