1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (09:38 IST)

ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்! – தஞ்சையில் அதிர்ச்சி!

Shawarma
தஞ்சாவூர் அருகே ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறந்த உணவகம் ஒன்றில் கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.