2வது நாளாக நடைபயணம்: விடாமல் போராடும் செயல் தலைவர்!

ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (11:07 IST)
தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் நேற்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 
அந்த வகையில் இன்று, தஞ்சாவூரில் 2 ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வாண்டையர் குடியிருப்பு வரை இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.
 
ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தின் போது விவசாயிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர். இந்த பயணம் கடலூரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...

சிறுவர்களை அடிமையாக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!.. Autoplay கட் ஆகிறதா?..

பிள்ளை பிடிப்பது போல எம்.எல்.ஏக்களை பிடிப்பது களவாணித்தனம்!.. விஜயை திட்டும் டிடிவி!..

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments