1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (10:07 IST)

போராட்டக்களத்தில் செல்பி ; பளார் விட்ட ஸ்டாலின் : வைரல் வீடியோ

காவிரி நீர் தொடர்பாக நேற்று சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், செல்பி எடுக்க வந்தவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தை துவக்கிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வாலஜா சாலை வழியாக, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியாக சென்றார்.  அவருடன் இளங்கோவன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சென்றனர். 
 
அப்போது, அவருடன் ஒரு நபர் செல்பி எடுக்க முயன்றார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்டாலின், அவர் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
தன்னிடம் செல்பி எடுக்க வந்த சிலரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்து அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.