1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (10:22 IST)

யாக மேட்டர்: விடாமல் துரத்தும் தளபதியார்!! திக்குமுக்காடும் ஓ.பி.எஸ்

சென்னை தலைமை செயலகத்தில் யாகம் நடந்தது தொடர்பான செய்திக்கு ஓபிஎஸ் விளக்கமளித்த பின்னரும் ஸ்டாலின் அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியதாக செய்திகள் வெளியானது. மக்கள் வரிப்பணத்தில் கோட்டையில் யாகம் நடத்தலாமா?. பதவிப் பிரமாணத்தை மீறி யாகம் செய்துள்ளார். வீட்டிலோ, கோயிலிலோ யாகம் நடத்தினால் அதனைப்பற்றி கவலையில்லை. கோட்டையில் யாகம் நடத்த என்ன உரிமை உள்ளது? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் முதலமைச்சராகவே பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.




















இதற்கு விளக்கமளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்றால் எல்லா எம்.எல்.ஏக்களும் யாகம் நடத்துவார்களே? ஏன் ஸ்டாலின் தேவையில்லாமல் பினாத்துகிறார். மூடநம்பிக்கைகளை ஸ்டாலின் நம்புகிறாரா?
 
தினமும் தலைமை செயலகத்தில் உள்ள என் அறைக்கு சென்றதும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் யாகம் நடத்தினேன் என பரவிய வதந்தி சுத்த பொய். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என ஓ.பி.எஸ் கூறினார்.
 
இந்நிலையில் இதற்கு எதிர்கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், சாமி கும்பிடுவது என்றாலும் கூட, வீட்டிலேயே கும்பிட்டு வரவேண்டும். அது எப்படி அவர் தலைமை செயலகத்தில் சாமி கும்பிடலாம். இது முற்றிலும் தவறானது என ஸ்டாலின் கூறினார். இதற்கு ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என அவர் கூறினார்.