Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம்; கைது: திமுக உறுப்பினர்கள் சாலை மறியல்!

சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம்; கைது: திமுக உறுப்பினர்கள் சாலை மறியல்!

Written By Caston
Updated: புதன், 14 ஜூன் 2017 (12:17 IST)
தமிழக சட்டசபையில் இன்று எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சியான திமுக இது தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது ஆனால் சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.


 
 
சரவணன் வீடியோ தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிராகரித்தார்.
 
ஆனால் திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற விவகாரங்களில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தபோதும் சட்டமன்றத்தில் விவாதிக்கவில்லையா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
ஆனாலும் சபாநாயகர் திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் சபாநாயகர் தனபால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
 
சாலை மறியலில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை காவல்துறையினர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை கைது செய்தனர்.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments