வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (13:43 IST)

தா.பாண்டியனை நலம் விசாரித்த ஸ்டாலின்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் முத்த தலைவரான தா. பாண்டியன் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இவருக்கு வயது 85. சமீபகாலமாக அவர் சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
 
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற தா.பாண்டியன். ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.  “கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை. அவரிடம் இயற்கை போராடுகிறது” என பேட்டியளித்தார்.
இந்நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,  தா.பாண்டியனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.