புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (10:49 IST)

ஸ்டாலினுக்கு நன்றி சொன்னவர் கைது… டிவிட்டரில் சாடல்!

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டுமன்னார் கோயில் அருகே திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக இடங்களைக் கைப்பற்றி இடிக்கும் பணிகல் இயந்திரங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. அப்போது காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இளங்கீரன் போலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து விவசாயக் கடன் தள்ளுபடிக்கு காரணமாக இருந்ததற்காக நன்றி தெரிவித்திருந்தார். அதனால்தான் இப்போது அதிமுக அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை! எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்? அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான்!’ எனக் கூறியுள்ளார்.