தென்னலூர் ஏரியில் நடந்த எண்கவுன்ட்டர்!- வட மாநில கொள்ளையன் சுட்டுக்கொலை!
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புத்தூர் இருங்காட்டுக்கோட்டை அருகே வட இந்தியாவை சேர்ந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளையடிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் கொள்ளையர்கள் தென்னலூர் ஏரி அருகே பதுங்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் முயன்றபோது நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.