வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதும் அவர்களுடைய விசைப்படகுகளை கைப்பற்றி வருவதுமாக இருக்கிறது 
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் இதனை அடுத்து திடீரென அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்ததோடு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது