1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (13:22 IST)

தவைவியா? இதெல்லாம் கவனிக்க வேண்டாமா? - வைரல் புகைப்படம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதோடு, தமிழக அரசு சார்பில் மானிய ஸ்கூட்டி வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசுகிறார்.
 
இந்நிலையில்,  அமைச்சர் வேலுமணியின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்ட்டரில் ‘ புரட்சி தலைவியே’ என்பதற்கு பதில் ‘ புரட்சி தவைவியே’ என அச்சிடப்பட்டுட்ட விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.