1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:23 IST)

வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு: சேகர் பாபு

sekhar babu
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கட் குறைக்கப்படுவதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமானது என்பதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே.
 
மேலும் பல பெருமாள் கோவிலில் அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது தெரிந்ததே.இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூபாய் 200 என்று விற்கப்படும் நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran