ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் மாதாவிற்கு விஷேச அலங்காரங்களும் மஹா தீபாராதனை
கரூரில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் மாதாவிற்கு விஷேச அலங்காரங்களும் மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஐயப்பன் ஆலயத்தில் 3 ம் ஆடி வெள்ளியை முன்னிட்டும், வரலெட்சுமி விரத்தினை முன்னிட்டும் மஞ்சள் மாதா அம்மனுக்கு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ல்லிதா சஹஸ்கர நாமங்கள் வாசிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ ஐயப்பனுக்கும் விஷேச அலங்காரங்களும் மஹா தீபாராதனைகளும் தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சகர் சிவஹர்சன், அலங்கரிக்கப்பட்ட தேவி கருமாரியம்மன் உருவில் இருக்கும் மஞ்சள் மாதாவிற்கு நாக ஆரத்தி, கலச ஆரத்திகளை தொடர்ந்து, கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகள் காட்டப்பட்டு, விஷேச சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பிரசாதங்கள் மற்றும் வளையல்களை மக்களுக்கு வழங்கி அம்மன் அருள் பெற்றன