சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மக்கள் சென்னை திரும்ப 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் சேர்த்து 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று புத்தாண்டுடன் இந்த விடுமுறைகள் முடிவடைந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறைகளுக்காக மக்கள் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்றுள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் சென்னை புறப்பட உள்ளனர். அதனால் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமான பேருந்துகளுடன், 500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
Edit By Prasanth.K