1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (23:22 IST)

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டுதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 
 
புதன் கிழமை,வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறைநாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிறஇடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம்மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது.சென்னைகிளாம்பாக்கத்திலிருந்துதிருவண்ணாமலை.
 
திருச்சி,கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10/04/2024 (புதன்கிழமை) அன்று 315 பேருந்துகளும் 12/04/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 290பேருந்துகளும், 13/04/2024 (சனிக் கிழமை) 340 பேருந்துகளும் சென்னைகோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகியஇடங்களுக்கு 10/04/2024, 12/04/2024 மற்றும் 13/04/2024 (புதன், வெள்ளிமற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 10/04/2024 (புதன் கிழமை) அன்று 315 பேருந்துகளும் 12/04/2024 ( வெள்ளிக் கிழமை) அன்று 290 பேருந்துகளும். 13/04/2024 (சனிக் கிழமை) அன்று 340 பேருந்துகளும்,கோயம்பேட்டிலிருந்து 10/04/2024 அன்று 40 பேருந்துகளும், 12/04/2024 அன்று 40 பேருந்துகளும், 13/04/2024 அன்று 40 பேருந்துகளும், மேற்கூறியஇடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர்ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும்இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும்பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்துஇடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 7,878பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6,610 பயணிகளும் சனிக்கிழமை 4,143பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம்மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது  பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.