வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (16:16 IST)

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

பசுமைத் தாயகம் மற்றும் ரோட்டரி நலச்சங்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான நிகழ்ச்சி போரூரில் உள்ள தனியார் கல்லூரி மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். 
 
மேலும் இந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இருப்பதால் தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படும் அதிக அளவில் மரங்களை நட வேண்டும் என பேசினார். மேலும் சாலை விரிவாக்கம் பணிக்காக மரங்கள் வெட்டப்படுகிறது ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்கள் நட வேண்டும் என்பது விதி உள்ளது தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் எவ்வளவு நடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளோம்  தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது அது குறித்து தகவல் தெரிவிப்போம் என பேசினார்.
 
அது மட்டும் இன்றி மது ஒழிப்பு மாநாடு, நடிகர் விஜய் அரசியல் குறித்த கேள்விகளுக்கு சிரித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.