செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (09:52 IST)

மகனின் தோழியை திருமணம் செய்த தந்தை! – சொத்து தராததால் வெட்டிக் கொன்ற மகன்!

தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சினை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளிக் காலத்திலிருந்தே சண்முக சுந்தரி என்ற தோழியும் உள்ளார். 12 வருடங்களுக்கு முன்பாக தங்கராஜ் தனது மகனின் தோழியான சண்முக சுந்தரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரனுக்கும், தங்க ராஜூக்கும் தகராறு ஏற்படவே தனது தாயுடன் திருக்குமரன் புலவனூர் சென்று விட்டார்.

இந்நிலையில் சொத்துக்களை பிரித்து தரும்படி திருக்குமரன் அடிக்கடி தங்கராஜிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் சமீபத்தில் சொத்தை பிரித்த தங்கராஜ் முதல் மனைவிக்கு 15 ஏக்கரும், இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கரும் பிரித்து கொடுத்துள்ளார். இதனால் முதல் மனைவியின் மகனான திருக்குமரன் அடிக்கடி தங்கராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சமீபத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார்.

அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவராகவே சென்று காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.