1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:58 IST)

நான் இன்னும் சில வருஷம்தான் உயிரோடு இருப்பேன்: 'நா தழு தழுத்த' வைகோ

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


 
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் மிகவும் உருக்கமாக பேசினார். மாணவர்களை பார்த்து தம்பிகளே என ஆரம்பித்த வைகோ,  காந்தியின் நினைவு தினத்தன்று இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியததை வேதனையுடன் சுட்டி காட்டி  பேசினார். அப்போது வைகோ திடீரென நா தழு தழுத்தார். தொடர்ந்து பேசிய வைகோ,  "நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்றார்.