அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழர்கள்: ரூ.47 லட்சம் சம்பளம்


Abimukatheesh| Last Updated: சனி, 28 ஜனவரி 2017 (12:42 IST)
அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளை பிடிக்கும் பணிக்கு தமிழகத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இவர்களுக்கு ரூ.47 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

 

 
அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் பர்மிசு மலைப்பாம்புகளின் ஆதிக்கம் அதிகமானதால் அவற்றை பிடிப்பதற்கு பாதி உலகத்தை கடந்து இந்தியாவிடம் உதவிக்கு நாடியுள்ளது.
 
ஃப்ளோரிடா மீன் மற்றும் விலங்கு நல வாரியம், தமிழகத்தின் இருளர் இன மக்கள், மலைப்பாம்பு பிடிப்பத்தில் தேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையில் இருவரை மலைப்பாம்பு பிடிப்பதற்கு பணி நியமனம் செய்துள்ளது.
 
அதன்படி ஒரே வாரத்தில் 13 மலைப்பாம்புகளை பிடித்துள்ளனர். இரண்டு உதவியாளர்கள் மற்றும் வேட்டை நாயின் உதவியோடு மலைப்பாம்புகள் இருக்கும் இடத்தை தெளிவாக கண்டறிந்து பிடித்து வருகின்றனர். 
 
இதற்காக இவர்களுக்கு ரூ.47 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து சென்று அமெரிகாவில் பாம்பு பிடித்து அசத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :