1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (15:03 IST)

அரசு பதிவேடுகளிலேயே சேரி உள்ளதே..? நடிகை குஷ்பு கேள்வி!

'சத்தியமா....சேரி என்ற வார்த்தையை அன்பு , அழகு என்பதை குறிப்பிடும் பிரெஞ்ச் வார்த்தையின் அடிப்படையிலேயே பயன்படுத்தினேன் என குஷ்பு பேட்டி.


'சேரி மொழி' சர்ச்சை குறித்து சென்னை விமான நிலையத்தில் தன்னிலை விளக்கம் தந்த நடிகை குஷ்பு. ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்,  நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ...

அப்போது பேசிய அவர், என் வீட்டை முற்றுகையிடப் போவதாக சிலர் கூறினார்கள் , யாராவது வருவார்களா என காத்திருந்தேன் ஆனால் யாரும் வரவில்லை. நான் தவறான அர்த்தத்தில் சேரி என்ற வார்த்தையை கூறவில்லை , பிறகு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சேரி என்றால் பிரெஞ்சில் அன்பு , அழகு என்று அர்த்தம்.

வேளச்சேரி , செம்மஞ்சேரி என்பதில் உள்ள சேரி என்ற  வார்த்தை தவறானதா .. அரசு பதிவேடுகளில் கூட சேரி என்ற வார்த்தை உள்ளதே. தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்டு நான் பேசவில்லை. பட்டியலின மக்கள் நம்முடன் சம்மாக வாழும் தகுதி இல்லாதவர்களா..? அவர்கள் வாழும் பகுதியை சேரி என்று ஏன் சொல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் வாழ்வோர் தாழ்த்தப்பட்டோர் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருபோதும் தகாத வார்த்தையை நான் பேசியதில்லை... திமுவை குறிப்பிட்டு நான் எழுதிய பதிவுக்கு காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். காங். திமுகவின் செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறதா. திமுகவுக்கு வேலை பார்க்கிறதா காங்? குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தீயசக்தி என்று கூறி அவமதித்த கட்சி காங்கிரஸ்.
நீட்-க்காக என்னிடம் கேள்வி கேட்கின்றனர்.  நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்காக நீதிமன்ற வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அதை கேள்வி கேட்டதா காங்? வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.  தமிழகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதை காங். ஏன் எதிர்க்கவில்லை.

மணிப்பூரில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று நான்  கூறியிருக்கிறேன். மணிப்பூர் கலவரம் குறித்து மே மாதமே தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. மணிப்பூர் மாநிலம் பற்றி குறிப்பிட்ட காணொலி யை பார்த்த பிறகுதான்  எனக்கு அந்த பிரச்சனை பற்றி தெரியவந்தது.

புகார் வந்தால் மட்டுமே மகளிர் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். மகளிர் ஆணையம் காவல்துறை கிடையாது. திரிஷா குறித்து எங்களிடம் புகார் வந்ததால்தான் நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். காயத்ரி ரகுராம் இதுவரை மகளிர் ஆணையத்தில் எந்த புகாரும் தரவில்லை. நடிகை ரோஜா எங்களிடம் புகார் அளித்தார் , எனவே அந்த புகார் குறித்து  நடவடிக்கை எடுத்தோம். புகார் வந்தால்தான் மகளிர் ஆணையத்தால்  நடவடிக்கை எடுக்க முடியும்.

என் வீட்டுக்காரர் திரைப்படத்தில் வருவது போல டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் பார்த்து ...ஏதாவதுதா என்பதுபோல உள்ளது காங்.கட்சியினர் என் வீட்டுக்கு வரப்போவதாக சொல்வது ((உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்)). தயவுசெய்து வாருங்கள் என்று நான் அவர்களை அழைக்கிறேன். பிரெஞ்ச் அர்த்தத்தில்தான் நான் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.

நான் இதுவரை பதிவு செய்த எந்த டிவீட்டையும் நீக்கியதே இல்லை. பிரதமரை நான் திட்ட பதிவு செய்த டிவிட்டையே நான் நீக்கியது இல்லை. யாருக்கும் பயந்து கொண்டு பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. நான் ஏப்ரல் மாதத்தில்தான் பொறுப்பு ஏற்றேன். மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளருக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனவரி மாதத்தில் நான் பொறுப்பில் இல்லை.

மன்சூர் அலிகான்- திரிஷா இடையே பிரச்சனை சாதாரண பிரச்சனை ,  தேவையில்லாத ஒரு பிரச்சனை இப்போது பெரிதாகியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்டிருந்தால்  அது அப்போதே சரியாகியிருக்கும். தமிழகத்தில் 450  தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் பதிவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள், காங் அது குறித்து குரல் கொடுத்துள்ளதா..?

வேங்கைவயல் குறித்து திமுகவிடம் காங்.க்கு கேள்வி கேட்க வக்கு இல்லை. 36 ஆண்டுகளாக நான் தமிழகத்தில்  இருக்கிறேன் , ஆனால் நான் பொறுப்பேற்ற பிறகுதான் தேசிய மகளிர் அணையம் பற்றி தமிழகத்தில் பேசுகின்றனர். 36 ஆண்டுகளுக்கு பிறகும் நான் எது பேசினாலும்  சர்ச்சையாவது எனக்கு மகிழ்ச்சிதான்.

என்னை பற்றி தவறான வார்த்தையில் விமர்சித்தவர்கள் டிவிட்டை நீக்கிவிட்டனர், சத்தியமாக நான் சேரி என்ற வார்த்தையை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. இத்தனை ஆண்டு திரைவாழ்வில் யாரிடமும் கெட்ட வார்த்தை பேசியதில்லலை நான். நடுவில் வந்து கொண்டு ஒருத்தன்  நானும் ரவுடிதான்..நானும் ரவுடிதான்னு என காமெடி பண்ணிக்கொண்டு இருந்தால் எனக்கு சிரிப்புதான் வரும். என் வீட்டை நேற்று காவல்காத்த பட்டினப்பாக்கம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.