வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (10:56 IST)

தடை விதிப்பாங்களோ? பதட்டத்தில் வியாபாரிகள்! – முடங்கிய பட்டாசு விற்பனை!

தீபாவளிக்கு பட்டாசு விற்க தடை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் பலர் பட்டாசு வாங்காமல் இருப்பதால் சிவகாசியில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் தீபாவளி திருநாள் வியாபாரிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுபோல டெல்லியிலும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மற்றும் ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிப்பதை தடை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படியாக தொடர்ச்சியாக பல மாநிலங்களில் பட்டாசுகள் விற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகள் வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் சிவகாசியில் வெளி மாநிலங்களுக்கான பட்டாசு விற்பனை மொத்தமாக சரிவை சந்தித்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.