1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (17:32 IST)

ஆன்லைன் மருத்து வணிகத்தை தடை செய்யக்கோரி கடையுடைப்பு....

ஆன்லைன் மருந்து வணிகத்தினை முற்றிலுமாக தடை செய்யக்கோரி வரும் 28ம் தேதி  கரூரில் கடையடைப்பு நடைபெற இருப்பதாக கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் கே.கே.செல்வன் பேட்டி அளித்துள்ளார்.

 
கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் மற்றும் மாநில செயலாளரும், அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளருமான கே.கே.செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
 
இந்த கூட்டத்தில் ஆன்லைன் மருந்து வணிகத்தினை முழுமையாக தடை செய்யக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வருகின்ற 20 ம் தேதி முதல் மருந்து வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து முதற்கட்டமாக எதிர்ப்பை காட்டியும், 28 ம் தேதி முழுமையான கடை அடைப்பு செய்யவும் மருந்துக்கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் அறிவுரையின் படி, இனிமேல், இரத்த சோதனை மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை பார்ப்பதில்லை எனவும், டி.பி (TB) காசநோய் சம்பந்தமான மருந்துகள், ஆக்சிடோசி போன்ற ஊசிகள், கருக்கலைப்பு மாத்திரிகைகள், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
 
மேலும்., மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் அரசுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தி மருந்து வணிகர்களுக்குள்ள, இடையூறுகளை, நீக்க சங்கம் பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநில செயலாளர், கே.கே.செல்வன் அகில இந்திய மருந்து வணிகர் சங்க, பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, அவருக்கான பாராட்டுரையை, மருந்துவணிகர் சங்க நிர்வாகி., தமிழ்ச்செம்மல் மேலை.பழநியப்பன் ஆற்றினார். 
 
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, மாநில செயலாளர் கே.கே.செல்வன், வரும் 28 ம் தேதி மருந்து வணிகத்தில் ஆன்லைன் முறையை மாற்ற வேண்டுமென்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், E way பில் என்கின்ற முறையை மருந்து வணிகத்தில் இரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். 
 
பேட்டி : கே.கே.செல்வன் – மாநில செயலாளர் - மாநில செயலாளர் & அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர்
-சி. ஆனந்தகுமார்