செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 பிப்ரவரி 2025 (15:03 IST)

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

நீடாமங்கலம் அருகே உள்ள பள்ளியில், காலை சிற்றுண்டி உணவில் பல்லி இறந்து கிடந்ததை பார்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இன்று காலை மாணவ, மாணவியர்கள் காலை சிற்றுண்டியாக பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

மாணவர்கள் சாப்பிட தொடங்கிய போது, உணவில் பல்லி இருப்பதை பார்த்து, தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்தினார். இதனை அடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்து, மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். இது குறித்து விசாரணை செய்த அவர், மாணவ, மாணவிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், இது குறித்து விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva