செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (16:49 IST)

அதிமுகவில் கருப்பாக இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்ற பின்னர் வெள்ளையாக மாறி விட்டார் - தமிழக முன்னாள் அமைச்சர் சொரத்தூர் ராஜேந்திரன் விமர்சனம்!

புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பு நீர் கலந்து  வருகிறது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆளும் அரசு சுகாதாரமற்ற குடி தண்ணீரை வழங்குவதை கண்டித்தும்,  பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீரை விநியோகம் செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் உப்பளம் வாட்டர் டேங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
அதிமுக அமைச்செயலாளரும்முன்னள் அமைச்சரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகாவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
 
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய சொரத்தூர் ராஜேந்திரன்,
அதிமுகாவில் கருப்பாக இருந்த செந்தில் பாலாஜி திமுகாவிற்கு சென்ற பின்னர் சிவப்பாகி விட்டாதாக விமர்சனம் செய்த அவர், லஞ்ச வழக்கில் கடந்த 1-ஆண்டு காலமாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மாலை மரியாதையோடு மீண்டும் அமைச்சர் பதவியை திமுக வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டினார் மேலும் குடும்பம்  வாழ வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைத்ததை போல் முதல்வர் ஸ்டாலின் அவரது மகனை துணை முதல்வராகவும், மருமகனை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தங்கையை கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நியமித்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.