1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 மே 2023 (12:26 IST)

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு..!

பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல கோடி செலவில் ஒரு ஆடம்பர மாளிகை கட்டிக் கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி நேற்று அவர் கட்டப்பட்டு கொண்டிருக்கும் அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். 
 
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
 
அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை சவுக்கு சங்கர் பேசி வருவதாக அந்த வழக்கில் குற்றம் தாக்கப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக தனது மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .
 
Edited by Mahendran