1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (16:58 IST)

சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்

2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தார்.
 

 

இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் என கோஷமிட்டனர்.  இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை. ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும் பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார். இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன் பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார். இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார். ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன் திணறினார்.