1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (22:05 IST)

மீண்டும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்!

மன்னார்குடி மற்றும் கோவை இடையே இயங்கி வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன என்பதும் அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் மன்னார்குடி மற்றும் கோவை இயங்கிவந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன
 
இந்த கோரிக்கைகள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டதன் காரணமாக அக்டோபர் 7 முதல் மீண்டும் மன்னார்குடி கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
இதற்கான முன்பதிவு காலம் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது