நடிகர்களுக்கு கூட்டம் கூடும்; ஓட்டு விழாது: கமல் பிரச்சாரம் பற்றி செல்லூர் ராஜூ கருத்து
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்த நிலையில் நடிகர்களுக்கு கூட்டம் கூடும் ஆனால் ஓட்டு விழுகாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் அவரை பார்க்க கூட்டம் கூடும் என்றும் ஆனால் அவர்கள் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் முந்தானை முடிச்சு படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களை கூட்டிக்கொண்டு வந்து ஓட்டு போட்டு கேட்டபோது கூட பெருங்கூட்டம் கூடியது என்றும் ஆனால் அவர்கள் தவக்களையை பார்த்தார்களே தவிர ஓட்டு போடவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேபோல குஷ்பூ வடிவேலு போன்றவர்கள் பிரச்சாரத்துக்கு வந்து ஓட்டு கேட்டார்கள் என்றும் ஆனால் மக்கள் ஓட்டு போடவில்லை என்றும் அவர் கூறினார். ஈரோடு மக்கள் விவரமானவர்கள் என்றும் எதையும் ஆராய்ந்து பார்க்கிறவர்கள் என்றும் இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பை ஈரோடு மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருக்குமார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
Edited by Siva