அவர் கிருஷ்ணன் இல்ல.. மாயோன்! – சீமானின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஆயர்குலத் தலைவன்! முல்லை நில இறைவன்! நமது மூதாதை மாயோன் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.