திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (13:58 IST)

லிஸ்ட் போட்டு தூக்குவேன்!: பிரச்சாரமா? மிரட்டாலா? – சீமானுக்கு குவியும் கண்டனங்கள்!

நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தனது கட்சி கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டல் விடுக்கும் தோனியிலும் சீமான் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்ற முறை தமிழ் தெரியாதவர்களை கட்டி வைத்து அடிப்பேன் எனவும், ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் எனவும் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாளுக்காக மதுரை ஒத்தக்கடையில் பேசிய சீமான் “என் தம்பிகளை பிடித்து சிறையிலடைப்பவர்களுக்கும், நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் எல்லாரையும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள் இறதுவிடுங்கள். இல்லையென்றால் உங்களை கொன்ற பழிக்கு நான் ஆளாக வேண்டியிருக்கும்” என பேசியுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நேரடியாக சீமான் கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரச்சார மேடைகளில் மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.