Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவுக்கு இருந்த அரசியல் பின்புலம் இப்போ சின்மயிக்கு - போட்டுத்தாக்கிய சீமான்

Updated: திங்கள், 15 அக்டோபர் 2018 (10:37 IST)
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

 
வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சின்மயி விவகாரம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது. வைரமுத்து தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்திருந்தால் தண்டிக்கப்படுவதில் நமக்கு பிரச்சினையில்லை! ஆனால் அதை விட்டுவிட்டு டுவிட்டரில் எழுதுவதன் மூலம் களங்கம் ஏற்படுத்துவது இவர்களது நோக்கத்தை சந்தேகிக்க வைக்கின்றது.
 
இதனால் வைரமுத்துவை அசிங்கப்படுத்த முடியும் அவ்வளவுதான். இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது என வழக்கறிஞர்கள் கூறிவிட்டதாக சின்மயியே கூறியுள்ளார். வைரமுத்துவுக்கு அரசியல் பின்புலம் இருந்ததால், இத்தனை வருடங்கள் கூறவில்லை. இப்போதுதான் நேரம் வந்தது என சின்மயி கூறியுள்ளார். அப்படியெனில், தற்போது சின்மயிக்கு அரசியல் பின்புலம் வந்துவிட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது” என அவர் பேட்டியளித்தார்.

எல்லாம் காட்டு

கொளத்தூர் தொகுதி வாக்குகள் சரிபார்க்கும் பணி.. திடீரென புறக்கணித்த திமுக முகவர்கள்...!

ஆறுகளில் தண்ணீர் இல்லை.. களையிழந்த ஆடிப்பெருக்கு.. பொதுமக்கள் ஏமாற்றம்..

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

அடுத்த கட்டுரையில்