திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (13:52 IST)

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு.. எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

கேரளா, மேற்கு வங்கம் உள்பட ஒரு சில மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் இருந்தாலும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொகுதி உடன்பாடு பிரச்சனை இல்லாமல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் பிகாரில் தற்போது இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு செய்து கொண்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஆர்ஜேடி கட்சிக்கு 26 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

 இதனை அடுத்து பீகாரில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடுகளை சிறப்பாக அமைத்தால் பாஜகவுக்கு கடும் சவாலாக இந்தியா கூட்டணி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன

Edited by Mahendran