விடுமுறை நாளான நாளை பள்ளிகள் திறப்பு –எதற்காக?
நாளை விஜயதசமிப் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளை திறக்க சொல்லி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று ஆயுத பூஜைக் கொண்டாடப்படுவதாலும் நாளை விஜயதசமி பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு காரணமாக பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நாளைப் பள்ளிகளைத்திறந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்து வருவதால், மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.