1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (20:27 IST)

மாணவி மர்ம மரணம்: கனியாமூர் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் கைது!

arrest
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியுள்ளது 
மாணவியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கனியாமூர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சந்திரசேகரன், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.