Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவா? இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல்!

Written By siva
Updated: புதன், 4 நவம்பர் 2020 (08:09 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 
 
ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை செய்ததாகவும் கொரோனா வைரஸ் மற்றும் பருவ மழை காரணமாக பள்ளி திறப்பதை  தள்ளி வைக்க ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும், கொரோனாவின் அடுத்த அலை டெல்லி கேரளா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தாக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் பள்ளி கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

எல்லாம் காட்டு

அரிசியில் கை வச்சா நீங்க காலி!.. சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை!...

இஸ்லாமிய நாடுகள் ஒன்னு சேர்ந்து அமெரிக்காவை எதிர்ப்போம்!.. ஈரான் அதிபர் கோரிக்கை...

நேபாள வெள்ளத்தில் சிக்கி 903 பேர் மரணம்!. 149 இந்தியர்கள் மீட்பு!...

விஜய்க்கு அந்த எண்ணமே இல்ல!.. கம்முன்னு இருங்க!.. வைகோ கருத்து...

டிக்கெட் புக் பண்ணா போதும்!.. அரசு பேருந்து வீட்டுக்கே வரும்!.. ஆந்திராவில் அறிமுகம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments