செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2017 (18:16 IST)

பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 20 பேர் சிக்கி தவிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தின் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


 

 
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கட்டிடத் தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. 
 
இதில் வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இடிபாட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.